'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

Update: 2022-10-09 20:28 GMT

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்விளக்குகள் பழுதடைந்து எரிவதில்லை. இதனால் வாகனஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கு கிறார்கள்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

பிரவீன்குமார், அவனியாபுரம்.

தேங்கிய குப்பை

மதுரை மாநகரில் எல்லீஸ்நகர் மற்றும் திடீர் நகர் பகுதி சாலையோரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடிவேல், மதுரை.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாநகராட்சி சாலைகளில் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், வேலை முடிந்து வீடு திரும்புவோர் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கீதாகதிர், மதுரை.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரம் கிராமத்தில் ரேஷன்கடை இல்லை. இதனை செய்தியாக தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சம்பந்தபட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே உடனடி நடவடிக்கை எடுக்க உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

கோபி, எழுமலை.

சாலை சீரமைக்கப்படுமா?

மதுரை அனுப்பானடியில் இருந்து சிந்தாமணி வரை செல்லும் அனுப்பானடி குறுக்கு சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிராஜ், மதுரை.

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள பள்ளி அருகில் சாலையோரங்களில் சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை கீரைத்துறை மின்மயானம் நுழைவு வாயில் தெருவில் மின்விளக்குகள் எரியாத காரணத்தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்ச உணர்வுடனே கடந்து செல்கின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், மதுரை.

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு திருவப்புடையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் பயணிகள் நிழற்குடை இல்லை.இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் முதியவர்களும் பெண்களும் வெயிலிலும் மழையிலும் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார்,மதுரை.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாநகராட்சி 61-வது வார்டு மஹபூப்பாளையம் மெயின் ரோடு 3-வது தெருவிலிருந்து 7-வது தெரு வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாட்சா, மஹபூப்பாளையம்,

பயன்படுத்த முடியாத சாலை

மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தில் இருந்து, வெ.புதூர் வழியாக அண்டமான் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது, இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள், அடிக்கடி பழுதாகி விடுகின்றன. எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ர.ராஜேஷ், வெ.புதூர்.

Tags:    

மேலும் செய்திகள்