தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-02-12 19:19 GMT

தொடரும் விபத்துகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடை வீதியில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திருவரங்குளம் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, நகரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நகரப்பட்டியில் இருந்து வடக்கிப்பட்டி, வடகாடு செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் மிகவும் அவதி அடைகின்றனர். இரவில் தெரு விளக்குகள் இல்லாததால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

Tags:    

மேலும் செய்திகள்