தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-09-16 17:53 GMT

வாகன ஓட்டிகளை கடிக்கவரும் தெருநாய்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்கள்

புதுக்கோட்டை நகரப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் ஒரு சில இடங்களில் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் நெய்வாசல்பட்டி விளக்கு ரோடு செல்லும் சாலை குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரம் சமீப காலத்தில் போடப்பட்டது. ஆனால் கடையக்குடி ஊராட்சி இந்திரா காலனி முதல் கோவிஞ்சன்பட்டி வரை சாலை போடாமல் விடப்பட்டுள்ளது. இதனால் சாலை நடுவே ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் நெய்வாசல்பட்டி சாலையில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆகவே குறிப்பிட்ட தூரம் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மரக்கன்றுகளையும் விட்டு வைக்காத விளம்பர பதாகைகள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் அருகேயுள்ள மாங்காடு பகுதிகளில் சாலையோர மரங்களில் கன்று மரங்களை கூட விட்டு வைக்காமல் ஆணி அடித்து அதில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கஜா புயலில் இப்பகுதிகளில் சாலையோரம் இருந்த மரங்கள் முற்றிலும் அழிந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலை பகுதி ஓரங்களில் புதிதாக வைக்கப்பட்டு வளர்ந்து வரும் மரக்கன்றுகளையும் விட்டு வைக்காமல் விளம்பர பதாகை வைக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தவிர்க்கப்படும் பணப்பரிமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் பிடிக்கும்போது, பல நேரங்களில் நேரடியாக பணம் கொடுக்காமல் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பெட்ரோல் நிலையத்திற்கு பணம் செலுத்தி வந்தனர். ஆனால் இதில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் நிரப்பினால் கையில் பணம் தர வேண்டும் ஏ.டி.எம். கார்டுகள் ஏற்க முடியாது என்று இணைய வழி பணம் செலுத்தும் முறையை தவிர்த்து வருகின்றனர். இதனால் பலர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு கையில் பணமில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது இன்சென்டிவ் கிடைக்கும் அதுவும் தவிர்க்கப்படுகிறது. ஆகவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்