தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-08-14 17:30 GMT

குண்டும், குழியுமான தார் சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா குரும்பப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள் சிதலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மருத்துவமனை கட்டிடத்தில் வளரும் அரசமரம்

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு பன்மாடிகட்டிடத்தில், மூன்றாவது தளத்தில் அரச மரக்கன்று வளர்ந்துள்ளது. இந்தஅரச மரக்கன்று கடந்த 2 ஆண்டுகளாக பெரிய செடியாக வளர்ந்துள்ளது. இதனால் அந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. பச்சிளம் குழந்தைகள் வார்டில் கட்டிடம் பாதிப்பிற்குள் ஆவதற்கு முன்பாக அரச மரத்தை அகற்ற மருத்துவமனை இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பயணிகள் தரையில் அமரும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கைகள் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ்களை நிறுத்த இடமில்லாததால் டிரைவர்-கண்டக்டர்கள் திணறி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்களால் கீழே விழும் வாகன ஓட்டிகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆதனூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் பொதுமக்களை கடிக்க வருவதுடன் சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்