தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிலிமிசை ஊராட்சிக்கு உட்பட்ட பிலிமிசையில் இருந்து கொட்டரை செல்லும் தார் சாலையின் வடபுறம் பிலிமிசை குளிக்கும் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால் முழுவதும் அதன் வடபுறம் உள்ள பட்டாதாரர்களால் தூர்க்கபட்டு விட்டது. இதனை வரத்து வெட்டி தண்ணீர் செல்லும் வகையிலும், தார் சாலையின் தென்புறமாக குளிக்கும் ஏரி மற்றும் குடிநீர் ஏரிக் கரைகளில் மேற்படி பட்டாதாரர்களால் கொட்டப்பட்ட குப்பைகள் ஏரிகளில் சரிந்து சுகாதார கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்
பெரியசாமி, பிலிமிசை, பெரம்பலூர்.