கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மூங்கில்குடி கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.;
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள மூங்கில் குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருமாரியம்மன் கோவிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 20-ந்தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், இரவு கருமாரியம்மன் வீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக பக்தர்கள் கரகம் எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மூங்கில் குடி கிராம மக்கள் செய்திருந்தனர். வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.