திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுகா, பெருங்கரை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம், பால் குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.