விருத்தாசலம்திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

விருத்தாசலம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-07-22 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கயது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவில், சிகர திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில், அங்குள்ள அக்னி குண்டத்திற்கு முன்பு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்