ெசங்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
சுதந்திர தின விழாைவ முன்னிட்டு செங்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.;
செங்கம்
சுதந்திர தின விழாைவ முன்னிட்டு செங்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
செங்கம் நகரில் போளூர் சாலையில் அமைந்துள்ள மிகப் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று துரியோதனன் படுகளம் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலையில் தீமிதி விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக திருக்கோவிலில் உள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.