பாலமுருகன் கோவிலில் தீமிதி திருவிழா
செஞ்சி அருகே பாலமுருகன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
செஞ்சி,
செஞ்சி அருகே பாடிப்பள்ளம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அக்னி குண்டத்தில் செடல் கம்பம் நிறுத்துதல், காவடி பூஜை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து சரவணன் என்கிற பக்தர் மீது உரல் வைத்து மாவு இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞர்கள் நற்பணி குழுவினர் செய்திருந்தனர்.