கிழக்கு போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு செய்தார்.;
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்று மாலை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், அங்குள்ள கோப்புகளையும் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலைபாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்து மதிப்பீடு செய்தார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.