மண் சாலையில் விளைபொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்

ராஜபாளையம் அருகே மண் சாலையில் சிரமத்துடன் விளைபொருட்களை விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.;

Update: 2023-09-18 19:12 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே மண் சாலையில் சிரமத்துடன் விளைபொருட்களை விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.

பயிர் சாகுபடி

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம் கிராமம் வழியாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிக்கு செல்லலாம். இங்குள்ள நிலங்களில் விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் இருந்து புல்லுப்பத்தி வனப்பகுதியில் 800 ஏக்கரில் மா, தென்னை, பருத்தி, கரும்பு, வாழை, நெல், காய்கறிகள் போன்றவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இங்கு விளையக்கூடிய விளை பொருட்களை கொண்டு செல்ல கூடிய சாலை 3 கி.மீ. தூரத்திற்கு வண்டிப்பாதையாக மண் மேவி காணப்படுகிறது.

தார்ச்சாலை

சுந்தரராஜபுரம், கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமத்தில் விளையும் விளை பொருட்களை நகர் பகுதிக்கு இந்த வழியாக தான் கொண்டு சென்று வி்ற்பனை செய்கின்றனர்.

இந்தநிலையில் இந்த சாலை மிகவும் குறுகலாக வண்டிப்பாதையாக இருப்பதால் விவசாய பொருட்களை மிகவும் சிரமத்துடன் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதுவும் மழைக்காலங்களில் இந்த சாலையை சிரமத்துடன் பயன்படுத்தும் நிலை உள்ளது. இங்கு தார்ச்சாலை அமைத்தால் அய்யனார் கோவில், ராஜபாளையம் பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். மேலும் பல்வேறு கிராமங்களையும் இணைக்கும் சாலையாகவும் அமையும். ஆதலால் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதியில் தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்