மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

Update:2023-03-27 00:30 IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா எம்.ஜி.கொல்ல அள்ளி பக்கமுள்ள கெங்கவாரத்தை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது 45). இவர் நேற்று முன்தினம் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ராயக்கோட்டை- கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது முருகம்மாள் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்