மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி சாவு

Update: 2022-12-08 18:45 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே உள்ள ஒட்டுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 36). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் சிங்காரப்பேட்டை- ஊத்தங்கரை சாலையில் பி.சி.நரசம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்