கந்தம்பாளையம் அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; ரிக் மேலாளர் பலி
கந்தம்பாளையம் அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; ரிக் மேலாளர் பலி;
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ரிக் வண்டி மேலாளர் பலியானார்.
ரிக் மேலாளர்
கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் பீச்சபாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 38). ரிக் வண்டி மேலாளர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்செல்வன் தனது மோட்டார்சைக்கிளில் பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது உலகபாளையம் பகுதியில் சென்றபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக தமிழ்செல்வன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.
விசாரணை
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நல்லூர் போலீசார் தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ரிக் வண்டி மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.