பள்ளி மாணவி திடீர் சாவு

பள்ளி மாணவி திடீர் சாவு;

Update:2022-09-01 22:30 IST

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பட்டகப்பட்டியைச் சேர்ந்தவர் சிவா. இவருடைய மகள் பிரித்திகா (வயது 11). இவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கம்பைநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கு டாக்டர் ஊசி போட்ட இடத்தில் ஒரு கட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக அதே ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை அளித்தனர். பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரித்திகா திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இதுபற்றி கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்