மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கினாரா?

முட்டம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கினாரா? என உறவினர்கள் கவலையில் உள்ளனர்.;

Update: 2023-06-14 18:45 GMT

ராஜாக்கமங்கலம்:

முட்டம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கினாரா? என உறவினர்கள் கவலையில் உள்ளனர்.

தனியாக மிதந்து வந்த வள்ளம்

குமரி மேற்கு கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல கடந்த 1-ந் தேதி முதல் 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் கடந்த 14 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் வள்ளங்கள், கட்டுமர மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் அழிக்கால் மீனவர்கள் வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றனர். கரையில் இருந்து ஒன்றரை நாட்டிக்கல் கடல் மைல் தூரம் சென்றபோது, ஆளில்லாமல் ஒரு வள்ளம் (படகு)கடலில் தனியாக மிதப்பதை கண்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த வள்ளத்தை மீட்டு முட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் கரை சேர்த்தனர்.

மீனவர் மாயம்

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனவர்கள் மீட்டு வந்த வள்ளத்தை பார்வையிட்டார். பின்னர் தனியாக மிதந்த வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் யார்?, அவர் கடலில் தவறி விழுந்து மூழ்கினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மீட்கப்பட்ட வள்ளம் முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த மரியதாசன் (வயது 57) என்பவருக்கு சொந்தமானது என்றும், மீன்பிடிக்க சென்ற அவர் கரைக்கு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

போலீஸ் ேதடுகிறது

இதனால் அவர் கடலில் தவறி விழுந்து மாயமாகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் உறவினர்கள் வள்ளம், விசைப்படகுகளில் சென்று கடலில் தவறி விழுந்த மரியதாசனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

வள்ளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் அந்த பகுதியில் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மாயமான மீனவர் மரியதாசனுக்கு பிரபா (48) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்