மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதா?

மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதா?;

Update: 2022-12-29 10:02 GMT

நல்லூர்

திருப்பூர் 46-வது வார்டு அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பின்புறம் உள்ள காலியிடம் தனியாருக்கு சொந்தமானது என்று கூறி அதை மீட்க மாநகராட்சி பள்ளியின் சுற்று சுவரை இடித்து விட்டு, புதிதாக கட்டும் பணிகளை ஆரம்பித்து உள்ளார். இந்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் அனுமதி பெற்றதாகவும் பள்ளி தலைமை ஆசிரியை ஞானம் தெரிவித்தார். பள்ளி வளாகத்துக்குள் இருக்கிற இடம் தனியாருக்கு சொந்தமானது என்று தலைமை ஆசிரியர் கூறியதால் தனியார் சுவர் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்