மாணவர்களுக்கு டிக்ஷனரி, நோட்டு புத்தகங்கள்
மாணவர்களுக்கு டிக்ஷனரி, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.;
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு டிக்ஷனரி, நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வார்டு உறுப்பினர் இளையராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை பிரபாவதி வரவேற்றார்.
5-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிக்ஷனரி, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ரெக்கார்ட் நோட்டுகளும், ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இளையராஜா, பொம்மி சுகுமாரன் ஆகியோர் வழங்கி பேசினர்.