ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரியில் மூத்த குடிமக்களுக்கு ரெயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2022-09-20 19:00 GMT

கிருஷ்ணகிரியில் மூத்த குடிமக்களுக்கு ரெயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் பவுன், வெங்கடேசன், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.

அகவிலைப்படி நிலுவை தொகை

மாவட்ட செயலாளர் முருகன் விளக்கவுரை ஆற்றினார். மண்டல தலைவர் ஸ்ரீனிவாசலு, முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜன், வருவாய்த்துறை சங்கம் ரவிச்சந்திரன், வணிகவரித்துறை சங்கம் முருகன், சர்வேயர் ஓய்வூதியர் சங்கம் சிவராஜ், மாவட்ட செயலாளர் குமார், கல்வித்துறை ஓய்வூதியர் சங்கம் கெம்பண்ணா, வனத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ராஜாமணி, அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் விஜயராஜன், கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகி முனியப்பா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட துணை தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

தர்ணா போராட்டத்தில் 6 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். வல்லுனர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உயர்த்திய பிடித்தம் ரத்து செய்ய வேண்டும்.

ரெயில் டிக்கெட் சலுகை

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஓய்வூதியர், வனத்துறை காவலர், ஊராட்சி எழுத்தர் மற்றும் பட்டுவளர்ச்சி தொழிலாளர் ஓய்வூதியர்களுக்கு 7,850 ரூபாய் வழங்க வேண்டும். பணி நிறைவு நாளன்று தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும். மத்திய அரசு கொரோனாவை காரணம் காட்டி மூத்த குடிமக்களுக்கு வழங்கிவந்த ரெயில் டிக்கெட் சலுகை பறித்ததை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்