சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்;

Update: 2022-08-30 19:04 GMT

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்களை கொண்டு காலை சிற்றுண்டி நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்