போலி பத்திரம் பதிவு செய்ததாக தர்ணா போராட்டம்

திருப்பத்தூரில் போலி பத்திரம் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாகக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-23 17:56 GMT

திருப்பத்தூரில் போலி பத்திரம் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாகக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் அலுவலகம் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் உள்ளது. இங்கு போலி பத்திரம் பதிவு செய்து உள்ளதாகக் கூறி நகராட்சி கவுன்சிலர் பி.பிரேம்குமார் தலைமையில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டைரோடு பகுதியில் வசிக்கும் வாசுதேவன், விக்ரம்கென்னடி, பிரேம்குமார், உஷாராணி ஆகிய எங்களது தாய்மாமன் கோவிந்தராஜ் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டார். அவரது சகோதரி உறவு முறையில் நாங்கள் வாரிசுதாரர்கள். எங்களுக்கு சொந்தமான நிலம் வெங்களாபுரம் அருகே 4.50 ஏக்கர் இருந்தது. அதில் 4.25 ஏக்கர் நிலத்தை ராஜேந்திரன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டோம்.

போலி பத்திரம்

இந்த நிலையில் மீதி உள்ள 25 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய வந்தபோது ஏற்கனவே நாங்கள் விற்பனை செய்த இடத்தில் இருந்தும், தற்போது இருக்கும் 25 சென்ட் நிலத்தை சேர்த்து 50 சென்ட் நிலம் போலி பத்திரம் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இது பற்றிய சார்பதிவாளரிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. பணம் பெற்றுக்கொண்டு போலி பத்திரம் பதிவு செய்தாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மாவட்ட பத்திர பதிவுத்துறை பதிவாளரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்