தர்மபுரி: துக்க நிகழ்ச்சிக்கு சென்ற ஆட்டோ வயலில் கவிழ்ந்து விபத்து - பெண்கள் உட்பட 8 பேர் காயம்
தர்மபுரியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற ஆட்டோ வயலில் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர்.;
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி குள்ளனூர் பகுதியை சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கோடியூரில் இருந்து நேற்று இரவு ஆட்டோவில் சென்றனர்.
இந்த ஆட்டோ அதியமான்கோட்டையில் உள்ள சோழராயன் ஏரிக்கரையில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நெல் வயலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில இருந்து 7 பெண்கள் உட்பட 8 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதியினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.