பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியருக்கு தர்மஅடி - திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வேங்கடத்தான் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 9 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக என்.விஜயா என்பவர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில இப்பள்ளியில் ஆசிரியர் விஜயன் என்பவர் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஊர் பொதுமக்களுடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயா உதவி கல்வி அலுவலர் மாதேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆசிரியர் விஜயனிடம் உதவி கல்வி அதிகாரி மாதேஷ் விசாரணை நடத்தினார். அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஆசிரியர் விஜயன் ஒப்புக் கொண்டார்.
இதனை கேட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து ஆசிரியர் விஜயனுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.