குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
திருட்டு நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.;
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி டோல்கேட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியை ரூ.29 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருள்களுடன் கடத்திச் சென்ற நபரை, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த 6 மணி நேரத்துக்குள் கைது செய்து, மினிலாரியுடன் பொருட்களை மீட்டனர்.
இந்த நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாணியம்பாடிக்கு வந்து, 6 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.