சூரமங்கலம் தீயணைப்பு அலுவலகத்தில் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் ஆய்வு

சூரமங்கலம் தீயணைப்பு அலுவலகத்தில் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் ஆய்வு செய்தார்;

Update:2023-06-23 01:41 IST

சேலம் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் வீரர்களிடம் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் குறைகளை கேட்டறிந்தார்.

துணை இயக்குனர் அலுவலகம்

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பி. ஆபாஷ் குமார் நேற்று சேலம் வந்தார். இதையடுத்து அவர் அழகாபுரம் சோனா நகரில் உள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவருக்கு தீயணைப்புத்துறை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

இதையடுத்து டி.ஜி.பி. ஆபாஷ்குமார் சேலம் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் கலந்து கொண்டு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு நிலைய வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

உரிய நடவடிக்கை

அப்போது அவர்களிடம் கோரிக்கை மனு குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் சேர்ந்து டி.ஜி.பி. ஆபாஷ்குமார் புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கூடுதல் இயக்குனர் (பயிற்சி, நிர்வாகம்) விஜயசேகர், மேற்கு மண்டல இணை இயக்குனர் சத்திய நாராயணன், மாவட்ட அலுவலர்கள் வேலு (சேலம்), அபாஷ் (தர்மபுரி) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.சேலம் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் செயல்படும் என்று அதிகாரிகள் தெரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்