காவலர் வீட்டுவசதி கழக டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீட்டுவசதி கழக டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-13 20:11 GMT

தமிழக டி.ஜி.பி. (காவலர் வீட்டு வசதி கழகம்) ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் மற்றும் மாநகர ஆயுதப்படை நிர்வாக அலுவலக பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ரூ.7 கோடி செலவில் மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் 14 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், மாநகர ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் 18 ஆயிரம் சதுர அடி பரப்பிலும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. தமிழம் முழுவதும் இதுபோன்று நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு செய்யப்படும்'' என்றார்.

இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்