பட்டத்து காளையை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

கம்பம் நந்தகோபாலன் சாமி கோவிலில் பட்டத்து காைளயை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-01-16 19:00 GMT

கம்பத்தில் நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவை பக்தர்கள் கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இங்கு 400 ஆண்டுகளுக்கு மேலாக மாடுகளை பராமரித்து வருகின்றனர். கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தை மாதம் பிறக்ககூடிய கன்றுகளை தைப்பொங்கல் அன்று கோவிலுக்கு தானமாக வழங்குவது வழக்கம். கோவிலில் சாமி விக்ரங்கள் இல்லாததால் பரம்பரையாக வளரக்கூடிய மாடுகளை பட்டத்து காளைக்கு தேர்ந்தெடுத்து அதனை தெய்வமாக போற்றி வருகின்றனர். மேலும் மாட்டுப்பொங்கல் பண்டிகையின்போது கம்பம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பட்டத்துக்காளையை வழிபாடு செய்து விட்டு செல்வார்கள். அதன்படி நேற்று மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி பட்டத்துக்காளைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பட்டத்து காளையை வணங்கி தரிசனம் செய்தனர். தை மாதம் பிறந்த நாட்டு மாட்டின் கன்றுகளை தானமாகவும் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்