கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

தென்காசி மாவட்டத்தில், புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-01 18:45 GMT

தென்காசி மாவட்டத்தில், புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று பக்தர்கள் திரளாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில், பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் முக்கிய கோவில்கள் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆங்காங்கே போலீசார் அதனை சீர் செய்து ஒழுங்குபடுத்தினர்.

பனவடலிசத்திரம்

இதேபோல் பனவடலிசத்திரம் பகுதிகளான மேலநீலிதநல்லூர் சிவஞான வெளியப்ப சாஸ்தா, மேலசிவகாமியம்மாள்புரம் ஸ்ரீஅழகப்பா சாஸ்தா மற்றும் உமையோர்பாக ஈஸ்வரர் கோவில், மூவிருந்தாளி பெரியாண்டவர் கோவில், மேலநாலந்தா அல்லல்காத்த அய்யனார் கோவில், சின்ன கோவிலாங்குளம் கொடுங்கால போத்தி அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மலர் அலங்காரம், சந்தன அலங்காரம், அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

கடையநல்லூர்

கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், சுந்தரேசபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் கடையநல்லூர் சுற்று வட்டார கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்