இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
தைப்பூசத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகத்தில் பக்தர்கள் அவசர தேவைக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் இருக்கன்குடி இன்ஸ்பெக்டர் மயிலு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.