மார்கழி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
மார்கழி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.;
விருதுநகர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில், மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட சில நாட்களில் மட்டுமே சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
அந்த வகையில் கடந்த 21-ந்தேதி முதல் நாளை 24-ந்தேதி வரை சதுரகிரி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.