பக்தர்கள் பால்குட ஊர்வலம்

சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

Update: 2023-04-28 18:45 GMT

நாகை சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் காமாட்சியம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக பால்பண்ணைச்சேரி ஜெயபத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக மேளதாள வாத்தியங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் நாகை தாலுகாவில் உள்ள பல்வேறு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்