திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - மலைப்பாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்..!

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;

Update: 2023-10-01 14:11 GMT

திருத்தணி,

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்ரமணிய சாமி கோவிலில், விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அதிக அளவில் வந்ததால் மலைக் கோவிலில் உள்ள வாகன நிறுத்தமிடம் நிரம்பியது. இதனால் மலைப்பாதைக்கு ஓரத்தில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்று விட்டனர்.

இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முடங்கியது. வாகன ஓட்டிகளும், பக்தர்களும் பாதிக்கப்பட்டனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்