விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-08 09:30 GMT

முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முருகப்பெருமானுக்கு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்து முருகனின் அருள் பெற்றுச் செல்வார்கள். இக்கோவிலுக்கு வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

விடுமுறை தினம்

இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால் திருத்தணி முருகன் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக நிறைந்து காணப்பட்டது.

நீண்ட வரிசையில் காத்திருப்பு

இதனால் பொதுவழியில் பக்தர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்துச் சென்றனர். அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்கக்கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்