கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
திருத்தணி முருகன் கோவில் அறுபடைவீடுகளில் முருகபெருமானின் புகழ்பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் நேற்று கிருத்திகை தினத்தையொட்டி மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு ஆராதனைக்கு பிறகு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது வழியில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அதேபோல் ரூ.100 மற்றும் ரூ.150 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.