பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;

Update: 2023-08-15 20:27 GMT

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, மாத கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பது வழக்கம். நேற்று சுதந்திர தின விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காலை முதலே பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி ஆகிய கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கூட்டம், கூட்டமாக படிப்பாதை, யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர். இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேர காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்