வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் மரணம்: ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு

மூச்சுத்திணறல், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2024-04-28 23:40 GMT

கோப்புப்படம்

கோவை,

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமானை தரிசிக்க ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வேலூர் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோடி (வயது 46) என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து மலையேற தொடங்கினர். 1-வது மலையேறியபோது புண்ணியகோடி வயிறு வலிக்கிறது என்று கூறி, வாந்தி எடுத்துள்ளார்.

இதனால் அவருடன் வந்தவர்கள், அவரை கீழே கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலாந்துறையை அடுத்த புலுவப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேறி 9 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மூச்சுத்திணறல், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்