சதுரகிரியில் பக்தர் திடீர் சாவு
சதுரகிரிக்கு வந்த பக்தர் திடீரென இறந்தார்.;
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டில் சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த சிவாஜி(வயது 55) என்பவர் கலந்து கொள்ள சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் சிவாஜியின் உடல் டோலி மூலம் தாணிப்பாறை அடிவார பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.