வளர்ச்சிப்பணிகள் ஆய்வு கூட்டம்

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-07-27 15:06 GMT


குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். குஜிலியம்பாறை ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

இதில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சிகளில் நடந்து வரும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கூடுதல் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மருதமுத்து, கற்பகம் (கிராம ஊராட்சிகள்), ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்