வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள்-தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.;
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி திருமாந்துறை ஊராட்சிக்குட்பட்ட தி.கீரனூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜையை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல் திருமாந்துறை ஊராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளையும், கழனிவாசல் கிராமத்தில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். அத்தியூர் கிராமத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.