ரூ.23 ½ கோடியில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் மேம்பாட்டு பணிகள்
ரூ.23½ கோடியில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.;
திருவெண்காடு:
ரூ.23½ கோடியில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
சுற்றுலா வளாகம்
பூம்புகாரில் சரித்திர புகழ்பெற்ற சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் சுற்றுலா வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ. 23 கோடியை 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் வரவேற்றார்.
ரூ.23½ கோடி
இதில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள சிலப்பதிகார கலைக்கூடம், நெடுங்கல் மன்றம், பாவை மன்றம், வாகனம் நிறுத்துமிடம், படகு குழாம் உள்ளிட்டவைகள் சீரமைக்கப்பட்டு புதிய பொலிவோடு பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூட வளாகம் காட்சியளிக்கும் விதமாக தற்போது ரூ.23.60 கோடியை தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி பணிகள் விரைவில் தொடங்கி நடைபெற உள்ளன. மேலும் பல்வேறு புதிய திட்டங்கள் பூம்புகார் வளர்ச்சிக்காக கொண்டு வரப்படும் என்றார். நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பஞ்சுகுமார், விஜயகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆனந்தன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்.