தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி
பாவூர்சத்திரத்தில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி நடந்தது.;
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் வட்டாரம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு பாவூர்சத்திரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. யூனியன் தலைவி காவேரி தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார்.
தொழில் முனைவு மேம்பாட்டு மைய மண்டல மேலாளர் தில்லைநாயகம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் வேல்முருகன், இளம் வல்லுனர் பிரசாத்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கீழப்பாவூர் வட்டார மேலாளர் மாலதி மார்டின் ஆகியோர் பேசினர். பயிற்சியில் கீழப்பாவூர், கடையம் வட்டார வாழ்த்து காட்டுவோம் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார அணித்தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.