ரூ.56¼ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
கழனிவாசல் ஊராட்சியில் ரூ.56¼ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்;
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரம், கழனிவாசல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, கட்டுமான பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்பதனை ஆய்வு செய்தார். பின்னர், கழனிவாசல் கிராமத்தில் உள்ள நூலகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கழனிவாசல் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்களை கள ஆய்வு செய்தார்.அப்போது குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், கஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.