வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-06 20:15 GMT

தஞ்சாவூர், ஜூன்.7-

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அரசுத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருமான ஆனந்த் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நமக்குநாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு

மேலும் நீர்நிலை புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல், இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்