தேவராஜி எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு அளித்தார்

தேவராஜி எம்.எல்.ஏ. தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு அளித்தார்.

Update: 2022-09-25 18:06 GMT

தி.மு.க. உள்கட்சித் தேர்தலில் மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு தற்போது விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு அளிக்க ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி நேற்று சென்னை புறப்பட்டு சென்றார். முன்னதாக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி., சி.என்.அண்ணாதுரை ஆகியோரிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்தார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன் உள்ளிட்ட மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்