கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

Update: 2023-07-01 20:08 GMT


பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

பேச்சாற்றல்

இதுபற்றி தமிழ் வளர்ச்சித்துறை கூறியதாவது:-

மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ்வளர்ச்சித்துறை மூலம் ஆண்டுதோறும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான 2022-23-ம் ஆண்டிற்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் விருதுநகரில் நடைபெற்றது. அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 166 மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்கள்

கவிதை போட்டியில் திருத்தங்கல் குளோரிமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய் ஸ்ரீ முதல் பரிசாக ரூ. 10ஆயிரமும், சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகுல லட்சுமி 2-ம் பரிசாக ரூ. 7ஆயிரமும், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.என்.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபத்ரா 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் பெற்றனர்.

கட்டுரை போட்டியில் முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தனலட்சுமி முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சிவகாசி லார்ட் பி.சி.ஏ. லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியப்ரியா 2-ம் பரிசாக ரூ. 7ஆயிரமும், கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவி புஷ்கலா தேவி 3-ம் பரிசாக ரூ. 5 ஆயிரமும்பெற்றனர்.

மாநில அளவில் போட்டி

பேச்சுப்போட்டியில் சிவஞானந்தபுரம் ஸ்ரீ சுரா வித்யா மந்திர் பள்ளி மாணவி சிவபூரணி முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சிவகாசி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவராஜன் 2-ம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், திருத்தங்கல் குளோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரதீபா 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் பெற்றனர். முதல் பரிசு பெற்ற மாணவ-மாணவிகள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்