மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்

மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு

Update: 2022-08-26 19:09 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவும் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- புதுக்கோட்டை-12, ஆலங்குடி-30, கந்தர்வகோட்டை-20, மழையூர்-13.60, திருமயம்-9.60, அரிமளம்-12.60, அறந்தாங்கி-1, ஆவுடையார்கோவில்-9.60, இலுப்பூர்-24, குடுமியான்மலை-19, அன்னவாசல்-2, விராலிமலை-31, கீரனூர்-1.40, பொன்னமராவதி-42, காரையூர்-51.

Tags:    

மேலும் செய்திகள்