தமிழக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் விவரம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது.

Update: 2023-11-18 05:33 GMT

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது.

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் தாக்கல் செய்த மசோதாக்களின் விவரம்:

*2020 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

*2020 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா

*தமிழ்நாடு பல்கலைக்கழங்கள் சட்டங்கள் திருத்த மசோதா

*தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் பல்கலைக்கழக திருத்த மசோதா

*தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

*தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

*தமிழ் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா

*2023 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

*தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்த மசோதா

*தமிழ் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா

*2023 மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

*2023 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. திருத்த சட்ட மசோதா

Tags:    

மேலும் செய்திகள்