சாலையோர கடையில் கெட்டுப்போன மீன்கள் அழிப்பு
குற்றாலத்தில் சாலையோர கடையில் கெட்டுப்போன மீன்கள் அழிக்கப்பட்டன.
தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் மெயின் ரோட்டில் மேலகரம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும் தற்காலிக கடை உள்ளது. இந்த கடையில் நேற்று மதியம் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு மூன்று நாட்களாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த மீன்களை விற்பனைக்காக வைத்திருந்ததை எடுத்து சோதனை செய்தார். அது கெட்டுப் போய் இருந்ததும், சுகாதாரமற்ற முறையில் இருந்ததாலும் அந்த மீன்களை பறிமுதல் செய்து அழித்தார். மொத்தம் 17½ கிலோ மீன்கள் அழிக்கப்பட்டன.