அரூர் அருகே 450 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

அரூர் அருகே 450 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது.

Update: 2023-06-02 18:45 GMT

அரூர்:

சாராய ஊறல்

அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தில் அரூர் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராமத்தில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள்.

அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக 450 லிட்டர் ஊறலை தயார் செய்து வைத்திருப்பதும், சாராயம் தயாரிக்கும் போது அதில் போதையை அதிகப்படுத்துவதற்காக ஊமத்தங்காய் சாற்றை பாத்திரத்தில் வைத்திருப்பதும் தெரியவந்தது. சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களும் அங்கு வைக்கப்பட்டு இருந்தன.

அழிப்பு

இதையடுத்து 450 லிட்டர் ஊறலையும், ஊமத்தங்காய் சாற்றையும் போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பகுதியை சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கு சாராயம் காய்ச்சுவதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குப்புராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாராயம் காய்ச்சுவதற்கான பொருட்கள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்